செங்குன்றம்

அமைவிடம் - செங்குன்றம்
ஊர் - செங்குன்றம்
வட்டம் - குடியாத்தம்
மாவட்டம் - வேலூர்
வகை - கற்திட்டை, கற்பதுக்கை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டை, கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரி

விளக்கம் -

செங்குன்றத்தில் உள்ள கற்திட்டைகள் 3000 ஆண்டுகள் பழமையானவை. இக்கிராம மக்கள் இதனை பாண்டவர் கல் என்றழைக்கின்றனர். மாண்டவர் கல் என்பது காலப்போக்கில் மருவி பாண்டவர் கல் ஆகியிருக்கலாம். இங்குள்ள கற்திட்டை செவ்வக வடிவ மூடுகல்லைப் பெற்றிருக்கிறது. இது தனித்துவமானது என தொல்லியலாளர்களால் கருதப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - திருப்பத்தூர் தூய நெஞ்சகக் கல்லூரி
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் உள்ள செங்குன்றம் என்னும் ஊரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் இங்கு பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளமை கண்டறியப்பட்டன. இங்கு காணப்படும் 15 கற்திட்டைகளுள் 5-க்கும் மேலான கற்திட்டைகள் சிதிலமடைந்துள்ளன.