அன்னவாசல்

அமைவிடம் - அன்னவாசல்
ஊர் - அன்னவாசல்
வட்டம் - சித்தன்னவாசல்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் அருகே உள்ள அன்னவாசல் என்னும் ஊரில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கல்வட்டங்கள் அளவில் சற்று பெரியவையாக காட்சியளிக்கின்றன. இங்கு அமைக்கப்பட்டுள்ள கற்கள் இரும்பு ஆகிய கனிமங்கள் கலந்தவையாக உள்ளன.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

புதுக்கோட்டை, சித்தன்னவாசல் அண்மையில் உள்ள அன்னவாசல் சித்தன்னவாசலைப் போன்றே தொல்லியல் களமாக விளங்குகின்றது. இங்கு அண்மையில் நடத்தப்பட்ட மேற்பரப்பு கள ஆய்வில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றுள் கல்வட்டங்கள் குறிப்பிடத்தக்கவை.