காசிலிங்கம்பாளையம்

    அமைவிடம் - காசிலிங்கம்பாளையம்
    ஊர் - காசிலிங்கம்பாளையம்
    வட்டம் - தாராபுரம்
    மாவட்டம் - திருப்பூர்
    வகை - கல்வட்டம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், கற்குவை
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தென்கொங்கு சதாசிவம்

    விளக்கம் -

    திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் உள்ள காசிலிங்கம்பாளையம் என்னும் சிற்றூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான கல்வட்டங்களும், கற்குவைகளும் காணப்படுகின்றன. காசிலிங்கபாளையம் பல்லடம்-உடுமலைச் சாலையிலிருக்கும் ஜல்லிப்பட்டி என்னும் ஊரின் கிழக்கே பிரியும் ஒரு சாலையில் அய்யநாயக்கன் பாளையத்தை காசிலிங்கம்பாளையம் அமைந்துள்ளது. காசிலிங்கம்பாளையத்தில் கல்வட்டங்கள் பெரிய பரப்பில் காணப்படுகின்றன. இருபது அல்லது இருபத்தைந்து கல்வட்டங்கள் தற்போது காணப்படுகின்றன. ஆனால் இவ்விடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமச்சின்னங்கள் அமைந்திருக்கக்கூடும். அவை சிதைந்துவிட்டன. தற்போது காணப்படும் கல்வட்டங்களும் முழு வட்டங்கள் என்பதாகத் தோற்றம் கொண்டிருக்கவில்லை. கற்களைக் குவியலாக அடுக்கிய கற்குவைகள் காணப்படுகின்றன. பெருங்கற்சின்னங்கள் பெரும்பாலும் பள்ளமான நீர்ப்பிடிப்புப் பகுதி அல்லது ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள வாழ்விடத்துக்கருகில் காணப்படும். காசிலிங்கம் பாளையத்துக்கு அருகிலும் நீரோடிய பள்ளம் காணப்படுகிறது. அமராவதி ஆற்றின் துணையாறான உப்பாறு அணித்துள்ளது எனத்தெரிகிறது.

    ஒளிப்படம்எடுத்தவர் - து.சுந்தரம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்