முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கற்திட்டை, பாண்டவன்திட்டு, தருமபுரி
அமைவிடம் | - | பாண்டவன் திட்டு |
ஊர் | - | பாண்டவன் திட்டு |
வட்டம் | - | தருமபுரி |
மாவட்டம் | - | தருமபுரி |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | முனைவர் தி.சுப்ரமண்யன், திரு. சுகவன முருகன், திரு.வி.ராஜன், திரு.அர்சுணன் |
விளக்கம் | - | தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் முனைவர் தி.சுப்ரமண்யன் தலைமையில் திரு. சுகவன முருகன், திரு.வி.ராஜன், திரு.அர்சுணன் ஆகிய ஆய்வாளர்கள் மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் ஆய்வினை மேற்கொண்டனர். இவ்வாய்வில் தருமபுரி பகுதியில் அதாவது மேட்டூர் அணையின் நீர்தேங்கும் பிரதேசங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவ்வாய்வின் போது 3000 வருடங்கள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும் கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பாண்டவன் திட்டு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்திட்டை மிகவும் பழமையானது ஆகும். தமிழகப் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றான இடத்தைப்பெறக் கூடிய ஒன்றாகும். இக்கற்திட்டையின் மூடுகல் மட்டும் சுமார் 80 டன்கள் இருக்கும் என்பது இதன் பிரம்மாண்டத்தைக் காட்டுவதாகும். அது மட்டுமல்ல இக்கற்திட்டையின் இடுதுளை கிழக்குப் பக்கம் உள்ளது. அரைவட்ட வடிவில் இருப்பதும் இதன் பழமையைக் காட்டுகிறது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து) |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |