திண்டல்

அமைவிடம் - திண்டல்
ஊர் - திண்டல்
வட்டம் - பெருந்துறை
மாவட்டம் - ஈரோடு
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஈரோட்டிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திண்டல் கிராமத்தில் காணப்படும் நெடுங்கல் சுமார் 10 அடி உயரம் கொண்டது. அகலம் சுமார் 4 அடி கொண்டது. இந்நெடுங்கல் சாய்ந்து காணப்படுகின்றது. இயற்கை இடர்பாட்டினால் இவ்வாறு கல் சாய்ந்திருக்க வாய்ப்புண்டு. இந்நெடுங்கல்லின் அருகே இருபுறங்களிலும் இரண்டு குத்துக்கற்கள் ஊன்றப்பட்டுள்ளன. இக்கற்கள் உயரம் மிகவும் குறைந்தவையாக தென்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் அமைந்துள்ள திண்டல் என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. இவ்வூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் நெடுங்கல் குறிப்பிடத்தக்கது.