சூலப்புரம்-உலைப்பட்டி

அமைவிடம் - சூலப்புரம்-உலைப்பட்டி
ஊர் - சூலப்புரம்-உலைப்பட்டி
வட்டம் - உசிலம்பட்டி
மாவட்டம் - மதுரை
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டம்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மதுரை மாவட்டத்தைச் சுற்றி பரவலாக காணப்படுகின்றன. சதுரகிரி அருகேயுள்ள சூலப்புரம் என்னும் ஊரில் அண்மையில் தொல்லியல் ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டன. இவ்வூர் தொல்லியல் களமாக மத்தியத் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளான கல்வட்டங்கள், தாழிகள் ஆகியன காணப்படுகின்றன. மேலும் இரும்புக்கழிவுகள், ஈமக்குழிகளுக்குள் புதைக்கப்பட்ட கல்மணிகள் ஆகியன கிடைக்கின்றன. இந்த தொல்லியல் களம் மிகப்பெரிய ஈமக்காடாக பண்டைய காலத்தில் விளங்கியிருப்பது நன்கு புலனாகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்திலுள்ள எழுமலை மற்றும் சதுரகிரி அருகே உள்ள சூலப்புரம்-உலைப்பட்டி கிராமத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு கல்வட்டங்கள், கல்வட்டங்களின் நடுவே ஈமத்தாழிகள், முதுமக்கள் தாழிகள் ஆகிய ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன.