புரசடைஉடைப்பு

அமைவிடம் - புரசடைஉடைப்பு
ஊர் - புரசடைஉடைப்பு
வட்டம் - காளையார் கோவில்
மாவட்டம் - சிவகங்கை
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - உருளைவடிவ குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் கண்டுபிடிக்கப்பட்டது. காளையார்கோவில் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. அக்காலத்தில் இறந்தவர்களை புதைத்தபின்பு கல் வட்டங்கள் வைப்பது வழக்கம். மேலும் முக்கியமானவர்களுக்கு மட்டும் புதைத்த இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஈமச்சின்ன கல் வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன கற்கள் அனைத்தும் சீரற்ற வடிவத்திலேயே இருந்தன. ஆனால் புரசடைஉடைப்பில் ஒரே ஒரு ஈமச்சின்ன கல் மட்டும் உருளை வடிவில் உள்ளது. இந்த கல் 235 செ.மீ. உயரமும், 100 செ.மீ., விட்டமும் கொண்டது. பூமிக்கு வெளியே 55 செ.மீ. தெரிகிறது. இந்தக் கல்லை நினைவுச் சடங்குகள் நடத்த பயன்படுத்தி இருக்கலாம். மேலும் அக்காலத்தில் முக்கியத்துவம் மிகுந்த நபருக்காக இந்த கல்லை வைத்திருக்கலாம். இதுபோன்ற ஒழுங்கு முறையான ஈமச்சின்ன கல்லை இதுவரை தமிழகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்கவில்லை எனலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - இந்து தமிழ் நாளிதழ்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள சிற்றூரான புரசடைஉடைப்பில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த உருளை வடிவ ஈமச்சின்ன கல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. ஒழுங்கான அமைப்பில் இறந்தவர்களின் புதைவிடத்தில் நினைவுக்கல் நடுவது அரியதாக சிலவிடங்களில் மட்டுமே. அவ்வகையில் புரசடைஉடைப்பில் உள்ள இந்த கல் குறிப்பிடத்தக்கது. ஒரு ஒழுங்கான வடிவத்தைப் பெற்றுள்ளது.