சீவலப்பேரி

அமைவிடம் - சீவலப்பேரி
ஊர் - சீவலப்பேரி
வட்டம் - பாளையங்கோட்டை
மாவட்டம் - திருநெல்வேலி
வகை - குத்துக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

திரு.மா.ஆறுமுக மாசான சுடலை

விளக்கம் -

சீவலப்பேரியில் கண்டறியப்பட்ட குத்துக்கல் கூம்பு போன்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. இதனை நெடுங்கல் என்றும் கூறலாம். இதன் உயரம் சுமார் 8 அடி ஆகும். நன்கு வடிவமைக்கப்பட்ட நிலையில் இக்குத்துக்கல் நடப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்படும் இக்குத்துக்கல் வகையானது இனக்குழுவின் தலைவன், செயற்கரிய செய்து உயிர் நீத்த வீரன் ஆகியோருக்கு எடுப்பிக்கப்படும். அவ்வகையில் சீவலப்பேரி கிராமத்தின் எல்லையானது உழக்குடிக்கு வடபுறம் அமைந்துள்ள குன்று வரை நீண்டுள்ளது. இக்குன்றின் அடிவாரத்தில் இந்த குத்துக்கல் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.மா.ஆறுமுக மாசான சுடலை
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகாவில் சீவலப்பேரி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தின் எல்லையானது உழக்குடிக்கு வடபுறம் அமைந்துள்ள குன்று வரை நீண்டுள்ளது. இந்தக் குன்றானது திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டத்தின் எல்லைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சீவலப்பேரி எல்லையில் பல இடங்களில் சிறிய அளவிலான 12 குத்துக்கலும் மற்றும் 20 க்கும் மேற்பட்ட கற்குவைகளும், உழக்குடி கிராம எல்லையில் ஒரு கல்வட்டமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.