தும்பல்

    அமைவிடம் - தும்பல்
    ஊர் - தும்பல்
    வட்டம் - பெத்தநாயக்கன்பாளையம்
    மாவட்டம் - சேலம்
    வகை - கல்வட்டம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2007
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தும்பல் கிராமத்தார்

    விளக்கம் -

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் தும்பல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் பின்புறம் உள்ள பரந்த வெளியில் 5 க்கும் மேற்பட்ட இந்தக் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்களின் உள்ளே கல்திட்டைகளும் தென்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊர்மக்கள் சிலர் இதனைத் தோண்டி கற்களை வெளிக்கொணர்ந்த போது உடைந்த பானைத்துண்டுகளையும் கண்டுள்ளனர். உள்ளே புதைந்திருந்ந கற்கள் சுமார் 8 அடி உயரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மண்மூடியதில் கிட்டத்தட்ட இத்திட்டைகள் மறையும் நிலையில் உள்ளன.

    ஒளிப்படம்எடுத்தவர் - பொன்னம்பலம் சிதம்பரம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்