முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கல்வட்டம், தும்பல், பெத்தநாயக்கன்பாளையம், சேலம்
| அமைவிடம் | - | தும்பல் |
| ஊர் | - | தும்பல் |
| வட்டம் | - | பெத்தநாயக்கன்பாளையம் |
| மாவட்டம் | - | சேலம் |
| வகை | - | கல்வட்டம் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறியப்பட்ட காலம் | - | 2007 |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தும்பல் கிராமத்தார் |
| விளக்கம் | - | சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் வட்டம் தும்பல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியின் பின்புறம் உள்ள பரந்த வெளியில் 5 க்கும் மேற்பட்ட இந்தக் கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்களின் உள்ளே கல்திட்டைகளும் தென்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஊர்மக்கள் சிலர் இதனைத் தோண்டி கற்களை வெளிக்கொணர்ந்த போது உடைந்த பானைத்துண்டுகளையும் கண்டுள்ளனர். உள்ளே புதைந்திருந்ந கற்கள் சுமார் 8 அடி உயரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது மண்மூடியதில் கிட்டத்தட்ட இத்திட்டைகள் மறையும் நிலையில் உள்ளன. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | பொன்னம்பலம் சிதம்பரம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |