பங்குநத்தம்

    அமைவிடம் - பங்குநத்தம்
    ஊர் - பங்குநத்தம்
    வட்டம் - தர்மபுரி
    மாவட்டம் - தர்மபுரி
    வகை - கல்வட்டம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

    விளக்கம் -

    தருமபுரியை அடுத்துள்ள பங்குநத்தம் கிராமத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் உள்ள இரண்டு குன்றுகளில் 3000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 300-க்கும் மேற்பட்ட பெருங்கற்காலச் ஈமச்சின்னங்களான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இவை அளவில் பெரிய கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. பங்குநத்தத்தில் உள்ள பெருங்கற்கால பண்பாட்டுத் தொல்லியல் தடயங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரும், வருவாய் துறையினரும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    ஒளிப்படம்எடுத்தவர் - திரு.சுகவனமுருகன் (மனோன்மணி புது எழுத்து)
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்