பூசநாயக்கன் குளம்

    அமைவிடம் - பூசநாயக்கன் குளம்
    ஊர் - ஆலம்பாளையம்
    மாவட்டம் - கோயம்புத்தூர்
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2013
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    தென்கொங்கு சதாசிவம்

    விளக்கம் -

    உடுமலையிலிருந்து மூணார் செல்லும் சாலையில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலம்பாளையம் என்னும் கிராமம். இவ்வூருக்கு கிழக்கே பூசநாயக்கன் குளம் என்ற இடத்தில் பெருங்கற்காலச் சின்னங்களான கல்பதுக்கை மற்றும் தாழிகள் அழிந்துபோன நிலையில் உள்ளது. இங்கு நக கீரலுடன் கூடிய ஓடுகளும், கருப்பு நிற ஓடுகளும் கிடைத்துள்ளன. கொங்குநாட்டுக்கு உரித்தான அலைபோன்ற ஓடுகள் இங்கு தென்படவில்லை. முதுமக்கள் தாழியில் கழுத்துப் பகுதியிலிருந்து 1அடி வரை கருப்பு நிறத்தில் உள்ளது. இதுபோன்ற தாழிகள் பேரூரில் கிடைத்துள்ளது. இவ்வூரில் உள்ள குளத்துக்கு அருகில் 17 ஆம் நூற்றாண்டச் சேர்ந்த தூம்பு ஒன்று உள்ளது.

    ஒளிப்படம்எடுத்தவர் - தென்கொங்கு சதாசிவம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்