பெரியதடாகம்

    அமைவிடம் - பெரியதடாகம்
    ஊர் - பெரியதடாகம்
    வட்டம் - கோவை வடக்கு
    மாவட்டம் - கோயம்புத்தூர்
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2015
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    முனைவர் ஜெகதீசன் ராஜாங்கம்

    விளக்கம் -

    கோவை மாவட்டம் கோவை வடக்கு வட்டத்தில் உள்ள பெரியதடாகம் என்னும் ஊரில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டப் பொழுது அப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்தன. கற்திட்டைகள் உடைந்த நிலையிலும், கற்திட்டைகளுக்குள் வைக்கப்பட்டிருந்த பானைகள் உடைந்த நிலையில் பானையோடுகளாகவும் மேற்பரப்பில் காணக்கிடக்கின்றன. இப்பகுதி அகழாய்வுக்கு உரிய பகுதியாக கொள்ள வாய்ப்புண்டு.

    ஒளிப்படம்எடுத்தவர் - முனைவர் ஜெகதீசன் ராஜாங்கம்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்