முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் கொடுமணல் நெடுங்கல்
அமைவிடம் | - | கொடுமணல் |
ஊர் | - | கொடுமணல் |
வட்டம் | - | பெருந்துறை |
மாவட்டம் | - | ஈரோடு |
வகை | - | நெடுங்கல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல், கற்திட்டைகள், கல் மணிகள், எழுத்துப் பொறிப்புள்ள பானையோடுகள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | 1961 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை, புதுச்சேரி பல்கலைக் கழகம் பேராசிரியர் க.ராஜன் |
விளக்கம் | - | நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகின்றது. இதன் கீழே தாழி காணப்படலாம் அல்லது நினைவுச் சின்னமாக எந்தவித ஈமப்பொருட்கள் இல்லாமலும் அமைந்திருக்கும். இது ஆங்கிலத்தில் Menhir எனப்படும். இக் கல் சில இடங்களில் மேற்புறம் கூர்முனையுடன் காணப்படுகின்றது. சில இடங்களில் பல நெடுங்கற்கள் ஒரு கல் வட்டத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளன. கொடுமணலில் அமைந்துள்ள நெடுங்கல் உயரமான நெடுங்கற்களுள் ஒன்றாகும். |
ஒளிப்படம்எடுத்தவர் | - | கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | கோ.சசிகலா |
சுருக்கம் | - | நெடுங்கல் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்ன வகையாகும். இக்கல் இறந்தவர்கள் நினைவாகவோ அல்லது இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ எழுப்பப்படுகின்றது. இதன் கீழே தாழி காணப்படலாம் அல்லது நினைவுச் சின்னமாக எந்தவித ஈமப்பொருட்கள் இல்லாமலும் அமைந்திருக்கும். இது ஆங்கிலத்தில் Menhir எனப்படும். இக் கல் சில இடங்களில் மேற்புறம் கூர்முனையுடன் காணப்படுகின்றது. சில இடங்களில் பல நெடுங்கற்கள் ஒரு கல் வட்டத்தின் பகுதியாகவும் அமைந்துள்ளன. இவை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், மலைகள் மற்றும் பாறைகள் கிடைக்கும் இடங்களில் காணப்படுகின்றன. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல், மதுரை மாவட்டத்தில் ச.பாப்பாநாயக்கன்பட்டி உட்பட பல ஊர்களில் இவை காணப்படுகின்றன. இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. இது நாட்டுக் கல் என்றும் அழைக்கப்படுகின்றது. நடுகல் என்பது நெடுங்கல்லின் வளர்ச்சியடைந்த வகையாகும். நடுகல் பொதுவாக வரலாற்றுத் துவக்கக்கால, இடைக்காலப் போர் வீரர்கள் நினைவாக எழுப்பப்பட்டதாகும். |