சித்தன்னவாசல்

அமைவிடம் - சித்தன்னவாசல்
ஊர் - சித்தன்னவாசல்
வட்டம் - புதுக்கோட்டை
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - கற்திட்டை, குத்துக்கல், நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள், நெடுங்கல், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
விளக்கம் -

         புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் பெருங்கற்கால தொல்லியல் தடயங்கள் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது. இப்பகுதியில் பெருங்கற்கால் ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்திட்டைகளும்,  நெடுங்கற்களும் காணப்படுகின்றன.  இந்த ஈமச்சின்னப் பகுதியானது தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களைப் போன்ற அமைப்புடையதாயினும் அகழாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்