அமைவிடம் | - | சேர்ப்பாக்கம் |
ஊர் | - | சேர்ப்பாக்கம் |
வட்டம் | - | உத்தரமேரூர் |
மாவட்டம் | - | காஞ்சிபுரம் |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், குத்துக்கல், இரும்புக் கசடுகள், உடைந்த தாழிப்பகுதிகள், மகாவீரர் சிற்பம் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2010 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேர்ப்பாக்கம் என்னும் சிற்றூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. பெருநகர் ஊராட்சியின் கீழ் அமைந்துள்ள இவ்வூரின் வடகிழக்கே அமைந்துள்ள நிலப்பரப்பில் தொல்லியல் தரவுகள் கண்டறியப்பட்டுள்ளன.இங்கு கருப்பு-சிவப்பு பானையோடுகளும், உடைந்த தாழிகளின் வாய்ப்பகுதிகளும், கல்வட்டங்களும், இரும்புக் கசடுகளும் (Iron slags) காணப்படுகின்றன. மேலும் குத்துக்கல் எனப்படும் நடுகல்லின் ஒரு வகையான வீரருக்கான நடப்பட்ட நினைவுக்கல்லும் இவ்வூரில் உள்ளது. இங்கு முன்பு வழிபாட்டில் இருந்த மகாவீரர் சிற்பம் ஒன்றும் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தொல்லியல் தரவுகள் தொல்லியல் ஆய்வாளர்கள் கோ.சசிகலா, திரு.பரந்தாமன் ஆகியோரின் மேற்பரப்பு களஆய்வின் போது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இவ்வூர் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டுள்ளதை இங்குள்ள தொல்லியல் ஈமச்சின்னங்கள் தெரிவிக்கின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | மதுரை கோ.சசிகலா |
சுருக்கம் | - | காஞ்சிபுரம்-வந்தவாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேர்ப்பாக்கம் என்னும் சிற்றூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. சேர்ப்பாக்கத்தில் தொல்லியல் ஈமச்சின்னங்களான குத்துக்கல், கல்வட்டங்கள், உடைந்த தாழிகளின் வாய்ப்பகுதிகள், மற்றும் கருப்பு, கருப்பு சிவப்பு பானையோடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் 2010-ஆம் ஆண்டு களஆய்வில் கண்டறிப்பட்டுள்ளன. |