உடையாநத்தம்

அமைவிடம் - உடையாநத்தம்
ஊர் - உடையாநத்தம்
வட்டம் - விழுப்புரம்
மாவட்டம் - விழுப்புரம்
வகை - ஆந்த்ரோபோமார்பியா-பறவைக்கல்/விசிறிக்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - ஆந்த்ரோபோமார்பியா-பறவைக்கல்/விசிறிக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை

விளக்கம் -

         விழுப்புரம்-திருவண்ணாமலைச் சாலையில் கீழ்வாலைக்கு முன்னதாக 3 கி.மீ. வடக்கில் செல்ல வேண்டும்.   “இது தாய்த் தெய்வ வழிபாட்டின் அடையாளம்” என்பார், ஆய்வாளர் டாக்டர் இரா.நாகசாமி. “இது கீழ்வாலைப் பாறை ஓவியத்தில் இடம்பெற்றுள்ள தாய்த் தெய்வத்தின் மூல உருவமாகவே தோன்றுகிறது” என்கிறார் பேராசிரியர் த.பழமலய். “இச்சிற்பம் கல்லில் செதுக்கிய கடவுள் அன்னையின் உருவம்” என்பது ஆய்வாளர் கே.வி.இராமனின் கருத்து. இப்பாறைக்கு அருகில் பழைமைவாய்ந்த கல்திட்டைகள் அதிகளவில் காணப்படுகின்றன. விசிறிப் பாறைக்குக் கிழக்கில், மலையடிவாரத்தில் ஆத்திலியம்மன் கோயில் அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - மதுரை கோ.சசிகலா