பெருநகர்

    அமைவிடம் - பெருநகர்
    ஊர் - பெருநகர்
    வட்டம் - உத்தரமேரூர்
    மாவட்டம் - காஞ்சிபுரம்
    வகை - கற்திட்டை
    கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

              காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்டைய பெரு நகரமாகும். காஞ்சிபுரத்தில் பெருநகர் என்னும் இப்பகுதியில் பெருங்கற்கால் ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்திட்டைகளும்,  நெடுங்கற்களும் காணப்படுகின்றன.  இந்த ஈமச்சின்னப் பகுதியானது தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களைப் போன்ற அமைப்புடையதாயினும் அகழாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் பெருநகர் பகுதியானது பண்டையநாளில் வணிகப் போக்குவரத்திற்கான பெருவழியில் அமைந்திருந்த ஊராக உள்ளது. பண்டையப் பெருவழிகளில் இவ்வாறான ஈமச்சின்னங்கள் தமிழகம் முழுவதும் காணப்படுவது கண்கூடு. எனவே இப்பகுதி பண்டைய வணிக நகரமாய் இருத்தலினால் இத்தகைய ஈமச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளது எனலாம்.

    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - திரு.பாலாஜி பாரதி
    சுருக்கம் -

             காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்டைய பெரு நகரமாகும். காஞ்சிபுரத்தில் பெருநகர் என்னும் இப்பகுதியில் பெருங்கற்கால் ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்திட்டைகளும்,  நெடுங்கற்களும் காணப்படுகின்றன.