திருமால்வாடி

அமைவிடம் - திருமால்வாடி
ஊர் - திருமால்வாடி
வட்டம் - பாலக்கோடு
மாவட்டம் - தருமபுரி
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை

விளக்கம் -

         தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டத்தில் உள்ள திருமால்வாடி என்னும் ஊரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நினைவுக்கல் சுமார் 4 அடி உயரத்தில் காணப்படுகின்றது. இந்த வீரக்கல்லை இங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

          பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான நெடுங்கல் போரில் இறந்த வீரரின் நினைவாக நடப்பட்டு வழிபாட்டிற்குரியதாக விளங்குவது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் இவ்வகையான வீரர்களுக்கு நடப்பட்ட நெடுங்கற்கள் மிகுதியாக காணப்படுகின்றன.