செங்களூர்

    அமைவிடம் - செங்களூர்
    ஊர் - செங்களூர்
    வட்டம் - குளத்தூர்
    மாவட்டம் - புதுக்கோட்டை
    வகை - பெருங்கற்காலம்
    கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள்
    பண்பாட்டுக் காலம் - கி.மு.3-ஆம் நூற்றாண்டு
    விளக்கம் -

              புதுக்கோட்டையின் கிழக்குப்புறமாய் மலையடிப்பட்டி செல்லும் வழியில் சுமார் 10 சதுர கி.மீ பரப்பளவில் ஆங்காங்கே கல்வட்டங்கள், கல்பதுக்கைகள் காணப்படுகின்றன. அசூர், செங்களூர், காளியாப்பட்டி, எலந்தப்பட்டி, காந்தளூர், பட்டவெளி வரையிலும், பழங்கனான்குடியின் கிழக்கு பகுதி வரையிலும் நீளுகிறது. குடியிருப்புகள் புதிதாய் வந்ததன் காரணமாய் நிறைய கல்வட்டங்கள் பிரித்து போடப்பட்டுள்ளன.

             செங்களூரில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட நீர்ப்பாசன மதகுகளால் மடை மாற்றப்பட்டு இக்கல்வட்டங்கள் வழியே பேரிடர் காலங்களில் திருப்பிவிடப்பட்டுள்ளது. ஆகவே நிறைய தாழிகள் உடைந்து விட்டன. இதில் குறிப்பிடத்தக்க இந்த ஈமக்காட்டின் அருகே சுவரமைத்து அடையாளப்படுத்தியுள்ளனர்.  அச்சுவரின் சிதிலமடைந்த எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன.

    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - திரு.திருச்சி பார்த்தி
    சுருக்கம் -

             புதுக்கோட்டை மாவட்டம், செங்களூர் பகுதியில் பல் வகையான ஈமச்சின்னங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் அகழாய்வும் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில். கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கும், அடையாளப்படுத்தும் அமைப்பாக இது திகழ்கிறது. இது அமைவதனால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை.