அமைவிடம் | - | செய்யூர்-விவசாய நிலம் |
ஊர் | - | செய்யூர் |
வட்டம் | - | செய்யூர் |
மாவட்டம் | - | காஞ்சிபுரம் |
வகை | - | கல்வட்டம் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், குத்துக்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2011 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | செய்யூர் மதுராந்தகத்தில் இருந்து 29 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் விவசாய நிலங்களில் பரவலாக 50-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. மேலும் ஏரிக்கரை செல்லும் வழியில் குத்துக்கற்களும் காணப்படுகின்றன. ஆனால் வேளாண்மைக்காக அவை கலைக்கப்பட்டுள்ளமை தெரிகிறது. மேலும் மேற்பரப்பாய்வில் கருப்பு-சிவப்பு பானையோடுகள் சிதறிக் கிடக்கின்றன. பலவிடங்களில் மண்ணில் புதைக்கப்பட்டுள்ள தாழியின் வாய்ப்பகுதி தெரிகின்றது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | இந்த கிராமம் முந்தைய ஜெயம்கொண்ட சோழபுரம், சேயூர் (Seyur) மற்றும் பேலபுரி (Belapuri) என்று அழைக்கப்பட்டது. தமிழில் 'சேய்' என்பது 'குழந்தை' எனப் பொருள்படும். முருகனைச் 'சேய்' என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. முருகன் கோயில் உள்ள இடம் சேயூர். சேயூர் முருகன் உலா, சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்கள் இவ்வூர் முருகன்மீது பாடப்பட்டவை. சேயூர் (பின்னர் செய்யூர்) என்ற பெயராக மருவிற்று. தொல்லியல் மற்றும் வரலாற்று எச்சங்களை தன்னிடத்தேக் கொண்டுள்ள செய்யூர் அகழாய்வு செய்யப்பட வேண்டிய பெருவழியில் அமைந்துள்ள சங்க கால ஊராகும். |