அமைவிடம் | - | கல்வேலிப்பட்டி |
ஊர் | - | கல்வேலிப்பட்டி |
வட்டம் | - | நத்தம் |
மாவட்டம் | - | திண்டுக்கல் |
வகை | - | பானையோடுகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கல்வட்டங்கள், கருப்பு, கருப்பு-சிவப்பு பானையோடுகள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2013 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | நத்தம் வட்டத்தில் அமைந்துள்ள கல்வேலிப்பட்டி என்னும் சிற்றூரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கிடைக்கின்றன. கருப்பு-சிவப்பு பானையோடுகள், இரும்புக் கசடுகள், தாழி போன்றவை மேற்பரப்பு களஆய்வில் கிடைக்கின்றன. இவ்வூர் சங்ககாலத்தில் செழிப்புடன் விளங்கிய வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது என்பதை இங்கு கிடைக்கும் தொல்பொருட்கள் சான்று பகர்கின்றன. இவ்வூரின் பெயரே கல்வேலிப்பட்டி என்னும் கல்லால் வேலி அமைத்தது போன்ற கல்வட்டங்களைக் கொண்டமையால் அமைந்துள்ளது என்பதை இங்கு மேற்கொள்ளப்பட்ட களஆய்வால் அறியப்படுகிறது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டாரத் தொல்லியல் கள ஆய்வின் போது பல்வேறு இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. நத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் வகைகளான கல்வட்டங்களும், குத்துக்கற்களும் காணப்படுகின்றன. பெருங்கற்கால பண்பாட்டைச் சேர்ந்த பானையோடுகள் வேளாண்மை நிலப்பகுதிகளிலும், ஊரின் புறத்தேயுள்ள ஏரிக்கரையில் முதுமக்கள் தாழிகளின் உடைந்த எச்சங்களும் கிடைக்கின்றன. லிங்கவாடி போன்ற ஊர்களில் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் எழுத்தின்றி, உருவத்துடன் அமைக்கப்பட்டு வழிபாட்டில் உள்ளன. மேற்பரப்பாய்வில் கல்வேலிப்பட்டியில் கண்டறியப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் தமிழகத் தொல்லியல் கழகத்தின் வெளியீடான ஆவணம் என்னும் ஆண்டு இதழில் வெளியிடப்பட்டு ஆவணப்பபடுத்தப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. |