அய்யனார் புரம்

அமைவிடம் - அய்யனார் புரம்
ஊர் - கரந்தை மலை மலையூர்
வட்டம் - நத்தம்
மாவட்டம் - திண்டுக்கல்
வகை - மேலைப் பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள்
கிடைத்த தொல்பொருட்கள் - மேலைப் பழைய கற்காலக் கருவிகள், நுண்கற்காலக் கருவிகள், கருப்பு மற்றும் கருப்பு-சிவப்பு பானையோடுகள், பழமையான அய்யனார் கோயில்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2013
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

பெரிய மலையூருக்கு மேற்கில் உள்ள மலையில் அய்யனார் அருவி தோன்றி பெரிய மலையூருக்கு கிழக்கே அய்யனார் ஓடை மற்றும் பாலாறு என்று பிரிகின்றது. இவ்விரண்டு நீர்நிலைகளால் மலைக்கு கிழக்கே நிலப்பகுதிகளை செழிக்க வைக்கின்றன. அய்யனார் ஓடையில் பழைய மற்றும் நுண் கற்காலக்கருவிகளும், உடைந்த கற்கருவிகளும் மிகுதியாகக் கிடைக்கின்றன. அய்யனார் ஓடைப்பகுதி நுண் கற்காலக்கருவிகளின் தொழிற்கூடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம் நத்தத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் அய்யனார்புரம் அமைந்துள்ளது. இவ்வூர் கரந்தை மலையின்; அடிவாரத்தில் உள்ளது. கரந்தை மலையிலிருந்து உற்பத்தியாகும் அய்யனார் ஓடையில் பழைய மற்றும் நுண் கற்காலக்கருவிகளும், உடைந்த கற்கருவிகளும் மிகுதியாகக் கிடைக்கின்றன. அய்யனார் ஓடைப்பகுதி நுண் கற்காலக்கருவிகளின் தொழிற்கூடமாக இருந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகின்றது.