குட்டியப்பட்டி

    அமைவிடம் - குட்டியப்பட்டி
    ஊர் - குட்டியப்பட்டி
    வட்டம் - இலுப்பூர்
    மாவட்டம் - புதுக்கோட்டை
    வகை - ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள்
    கிடைத்த தொல்பொருட்கள் - BRW, BW, RW, CRW, RSW பானையோடுகள், கருப்புநிற உடைந்த கிண்ணப்பகுதி, சிவப்பு நிற உடைந்த கிண்ணப்பகுதிகள், கருப்புசிவப்பு நிற மற்றும் சிவப்புநிற தாழிகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    மதுரை கோ.சசிகலா

    விளக்கம் -

    குட்டியப்பட்டி கொடும்பாளூரிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் விருதாபட்டியை அடுத்து அமைந்துள்ள இவ்வூர் கொடும்பாளூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடும்பாளூர் மணப்பாறை சாலையின் வலதுபுறம் உள்ள வீரங்குளம் கண்மாயில் கற்குவியல்களுடன் கூடிய ஈமத்தாழிகள் பதினைந்துக்கும் மேற்பட்டவை காணக்கிடைக்கின்றன. கல்வட்டங்கள் 5 மேற்பட்டவை காணப்படுகின்றன. இவை ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கே BRW, BW, RW, CRW, RSW போன்ற பானையோடுகளும், கருப்புநிற உடைந்த கிண்ணப்பகுதி மற்றும் சிவப்பு நிற உடைந்த கிண்ணப்பகுதிகள் மற்றும் கருப்புசிவப்பு நிற, சிவப்புநிற தாழிகள் கிடைக்கின்றன.

    ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    சுருக்கம் -

    குட்டியப்பட்டி கொடும்பாளூரிலிருந்து மணப்பாறை செல்லும் வழியில் விருதாபட்டியை அடுத்து அமைந்துள்ள இவ்வூர் கொடும்பாளூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடும்பாளூர் மணப்பாறை சாலையின் வலதுபுறம் உள்ள வீரங்குளம் கண்மாயில் கற்குவியல்களுடன் கூடிய ஈமத்தாழிகள் பதினைந்துக்கும் மேற்பட்டவை காணக்கிடைக்கின்றன. கல்வட்டங்கள் 5 மேற்பட்டவை காணப்படுகின்றன. இவை ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.