காரைமேட்டுப்பட்டி

அமைவிடம் - காரைமேட்டுப்பட்டி
ஊர் - காரைமேட்டுப்பட்டி
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - ஈமச்சின்னம் மற்றும் வாழ்விடப்பகுதி -தாழி, பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

இராஜகிரி பஞ்சாயத்தைச் சேர்ந்த காரைமேட்டுப்பட்டி விராலிமலையிலிருந்து கிழக்கே 2கி.மீ. தொலைவில் உள்ள சீத்தக்காட்டுப்பட்டியிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் வடமேற்கில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதிக் காணப்படுகின்றது. மேலும் கருப்பு மற்றும் கருப்பு சிவப்பு நிற பானையோடுகள் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள மதியன்கோயில் பகுதி முழுவதும் பெருங்கற்கால வாழ்விடப்பகுதியாக அமைந்துள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

காரைமேட்டுப்பட்டியில் பெருங்கற்கால வாழ்விடப்பகுதிக்கான மண்மேடு காணப்படுவது குறிப்பிடத்தக்கது. மேற்பரப்பு களஆய்வில் வாழ்விடப்பகுதிக்கான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன.