நம்பம்பட்டி

அமைவிடம் - நம்பம்பட்டி
ஊர் - நம்பம்பட்டி
வட்டம் - இலுப்பூர்
மாவட்டம் - புதுக்கோட்டை
வகை - வாழ்விடப்பகுதி-பானையோடுகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கருப்பு நிற பானையோடுகள், சிவப்பு நிற பானையோடுகள், கருப்புசிவப்பு நிற பானையோடுகள், மெருகூட்டப்பட்ட கருப்புசிவப்பு நிற பானையோடுகள், வழவழப்பாக்கப்பட்ட சிவப்பு நிற பானையோடுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மதுரை கோ.சசிகலா

விளக்கம் -

விராலிமலையிலிருந்து மணப்பாறை போகும் சாலையின் வலதுபுறம் 7 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரின் வடக்கே தேவகுளத்தின் வடபுறம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வாழ்விடப்பகுதிகள் காணப்படுகின்றன. இங்கு BRW, BW, RW, CRW, RSW, PAINTED B&R WARE போன்ற பானையோடுகளும், கிண்ணங்களும், பானைகள் மற்றும் எலும்புகளும் கிடைக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

நம்பம்பட்டி ஒரு பெருங்கற்கால வாழ்விடப்பகுதியாகும். இவ்வூரில் நன்கு வழவழப்பாக்கப்பட்ட கருப்பு நிற பானையோடுகள், மற்றும் சிவப்பு நிற பானையோடுகள் மேற்பரப்பில் அதிகளவில் காணக் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.