| அமைவிடம் | - | மேல்பூதகுடி |
| ஊர் | - | மேல்பூதகுடி |
| வட்டம் | - | இலுப்பூர் |
| மாவட்டம் | - | புதுக்கோட்டை |
| வகை | - | நுண்கற்காலக் கருவிகள் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | நுண்கற்காலத்தைச் சேர்ந்த சில்லுகள், கருப்பு சிவப்பு நிற உடைந்த பானையோடுகள் |
| பண்பாட்டுக் காலம் | - | நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்காலம் |
| கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2014 |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
| விளக்கம் | - | விராலிமலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இங்கு ஈமத்தாழிகள் காணப்படுகின்றன. பொருவாய் கண்மாயில் நுண்கற்காலத்தைச் சேர்ந்த சில்லுகள், கருப்பு சிவப்பு நிற உடைந்த பானையோடுகள் கிடைக்கின்றன. இவ்வூரில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாடுகள் நிலவியிருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| சுருக்கம் | - | விராலிமலையிலிருந்து வடமேற்கே 4 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் நுண்கற்காலம் மற்றும் பெருங்கற்கால பண்பாடுகள் நிலவியிருந்ததற்கான தொல்லியல் எச்சங்கள் கிடைக்கின்றன. |