அமைவிடம் | - | கல்லுப்பட்டி |
ஊர் | - | கல்லுப்பட்டி |
வட்டம் | - | இலுப்பூர் |
மாவட்டம் | - | புதுக்கோட்டை |
வகை | - | வாழ்விடப்பகுதி-பானையோடுகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | சிவப்பு நிற பானையோடுகள், சொரசொரப்பான காவிநிற பானையோடுகள் |
பண்பாட்டுக் காலம் | - | மத்திய வரலாற்றுக்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2014 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | இலுப்பூர் வட்டத்தில் பூதகுடிக்கு தென்மேற்கே 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் கோயில் மண்டபம் ஒன்று இடிந்த நிலையில் காணப்படுகிறது. மண்டபத்தின் அருகினில் பெரிய தெப்பக்குளம் உள்ளது. வரலாற்று இடைக்காலத்தைச் சேர்ந்த வாழ்விடப்பகுதியான இவ்வூரில் சிவப்பு நிற பானையோடுகளும், சொரசொரப்பான காவிநிற பானையோடுகளும் பரவலாகக் கிடைக்கின்றன. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | கல்லுபட்டி ஊர் பெருங்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியான பண்பாட்டைக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் மேற்பரப்பு களஆய்வில் வரலாற்று இடைக்காலத்தைச் சேர்ந்த அதாவது கி.பி.4-7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் கிடைக்கின்றன. ஊர் கண்மாய்ப்பகுதி ஈமக்காடாக விளங்குகிறது. தாழி வகை ஈமச்சின்னங்கள் கண்மாய்க் கரையில் சிதைந்த நிலையில் உள்ளன. |