உத்திரமேரூர்

அமைவிடம் - உத்திரமேரூர்
ஊர் - உத்திரமேரூர்
வட்டம் - உத்திரமேரூர்
மாவட்டம் - காஞ்சிபுரம்
வகை - கற்திட்டைகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2015
விளக்கம் -

காஞ்சிபுரம் தமிழகத்தின் பண்டைய பெரு நகரமாகும். காஞ்சிபுரத்தில் உத்திரமேரூர் என்னும் இப்பகுதியில் பெருங்கற்கால் ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான கற்திட்டைகள் காணப்படுகின்றன. இந்த ஈமச்சின்னப் பகுதியானது தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பெருங்கற்கால ஈமச்சின்னங்களைப் போன்ற அமைப்புடையதாயினும் அகழாய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் உத்திரமேரூர் பண்டையநாளில் இருந்து வணிகப் போக்குவரத்திற்கான பெருவழியில் அமைந்திருந்த ஊராக உள்ளது. பண்டையப் பெருவழிகளில் இவ்வாறான ஈமச்சின்னங்கள் தமிழகம் முழுவதும் காணப்படுவது கண்கூடு. எனவே இப்பகுதி பண்டைய வணிக நகரமாய் இருத்தலினால் இத்தகைய ஈமச் சின்னங்கள் அமையப்பெற்றுள்ளது எனலாம். மேலும் உத்திரமேரூர் பல்லவர் மற்றும் சோழர்கள் ஆட்சிகாலத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊராகத் திகழ்ந்தமைக் காரணம் பெருங்கற்காலத்திலிருந்தே அதன் தொடர்ச்சியே ஆகும்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.பாலாஜி பாரதி
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியின் ஈமக்காடுகள் அடங்கியுள்ள வெளிகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த கற்திட்டைகள் மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.