வடகாட்டுப்பட்டி

    அமைவிடம் - வடகாட்டுப்பட்டி
    ஊர் - வடகாட்டுப்பட்டி
    வட்டம் - இலுப்பூர்
    மாவட்டம் - புதுக்கோட்டை
    வகை - தாழி, பானையோடுகள்
    கிடைத்த தொல்பொருட்கள் - சிவப்பு நிற பானையோடுகள், சொரசொரப்பான காவிநிற பானையோடுகள், தாழிகள்
    பண்பாட்டுக் காலம் - மத்திய வரலாற்றுக்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2014
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    மதுரை கோ.சசிகலா

    விளக்கம் -

    வடகாட்டுப்பட்டி விராலிமலையிலிருந்து தெற்கே மதுரை செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூரின் மேற்குப்பகுதியில் உள்ள கண்மாயின் கிழக்குப்பகுதியில் இடைக்காலத்தைச் சேர்ந்த வாழ்விடப்பகுதிகள் காணப்படுகின்றன. சிவப்புநிற பானையோடுகளும், சொரசொரப்பான காவிநிற பானையோடுகளும் கிடைக்கின்றன. மேலும் கண்மாயின் வடக்குப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தாழி வகைகள் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன.

    ஒளிப்படம்எடுத்தவர் - மதுரை கோ.சசிகலா
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
    சுருக்கம் -

    வடகாட்டுப்பட்டி ஊர் பெருங்கற்காலத்திலிருந்து தொடர்ச்சியான பண்பாட்டைக் கொண்டிருந்தாலும் மேற்பரப்பு களஆய்வில் வரலாற்று இடைக்காலத்தைச் சேர்ந்த அதாவது கி.பி.4-7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பானையோடுகள் கிடைக்கின்றன.