முகப்பு தொல் பழங்காலம் பெருங்கற்காலம் சிவகளை - பேட்மாநகரம் சாலையில் உள்ள பறம்பு
அமைவிடம் | - | சிவகளை - பேட்மாநகரம் சாலையில் உள்ள பறம்பு |
ஊர் | - | சிவகளை - பேட்மாநகரம் |
வட்டம் | - | ஸ்ரீவைகுண்டம் |
மாவட்டம் | - | தூத்துக்குடி |
வகை | - | தாழிகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | தாழிகளின் வாய்ப்பகுதிகள், கருப்பு சிவப்பு பானையோடுகள், இரும்புக் கருவிகள் மற்றும் ஆயுதங்கள் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2018 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | சிவகளை ஆ.மாணிக்கம் |
விளக்கம் | - | சிவகளை -பேட்மாநகரம் சாலையில் உள்ள பறம்பு ஆயிரம் ஏக்கர் வரையில் விரிந்து செல்கிறது. இந்த தொல்லியல் களம் ஆதிச்சநல்லூருக்கு இணையாக உள்ளது. இங்கு மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு களஆய்வில் முதுமக்கள் தாழிகள், ஆயுதங்கள் போன்றவை கண்டறியப்பட்டுள்ளன. விரிவாக அகழாய்வு செய்ய வேண்டிய பாதுகாக்கப்பட வேண்டிய தொல்லியல் களம் இது, |
ஒளிப்படம்எடுத்தவர் | - | சிவகளை ஆ.மாணிக்கம் |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | பேட்மாநகரம்-சிவகளை சாலையில் உள்ள பறம்பில் முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள் மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தொல்லியல் களம் அகன்ற பரப்பை உடைய ஈமக்காடாக விளங்குகிறது. அலெக்ஸாண்டர் ரீ 1900களில் நெல்லையின் 36 இடங்களை கண்டுபிடித்து வரைபடம் தயாரித்து அவை பெருங்கற்காலச் சின்னங்கள் என்று குறிப்பிட்டுள்ளார், அந்த 36 இடங்களில் சிவகளை பேட்மாநகரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, |