மலையனூர் திட்டு

அமைவிடம் - மலையனூர் திட்டு
ஊர் - மேட்டூர்
வட்டம் - மேட்டூர்
மாவட்டம் - சேலம்
வகை - கற்திட்டை
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2018
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையம்

விளக்கம் -

மலையனூர் திட்டு என்ற இடத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு கல்வட்டத்தின் நடுவே ஈமப்பதுக்கை இருப்பதும் அறியப்பட்டது. சுமார் 20ற்கும் மேற்பட்ட ஒவ்வொரு பாறாங்கல்லும் ஒருடன் எடையுள்ள கற்களால் இக்கல்வட்டம் இருப்பதும் அபூர்வமான ஒன்றாகும்.இடுதுளை ஒன்று இருந்திருக்கும் என்று யூகம் செய்ய மட்டுமே முடிகிறது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒளிப்படம்எடுத்தவர் - ஆறகழூர் வெங்கடேசன் பொன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

தகடூர் சமூக வரலாற்று ஆய்வு மையத்தின் சார்பில் மேட்டூர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வின் போது 3000 வருடங்கள் பழமையான கற்திட்டைகளுடன் கூடிய கல்வட்டங்களும் கற்திட்டைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.