அமைவிடம் | - | பஞ்சலிங்கபுரம் |
ஊர் | - | பஞ்சலிங்கபுரம் |
வட்டம் | - | ஈரோடு |
மாவட்டம் | - | ஈரோடு |
வகை | - | நெடுங்கல் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | நெடுங்கல் |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
விளக்கம் | - | கொங்கு பகுதியில் ஈரோடு மாவட்டத்தில் தான் அதிக நெடுங்கற்கள் அமைந்துள்ளன. ஈரோடு மாவட்டம், கரூர் சாலையில் உள்ள பஞ்சலிங்கபுரம் எனும் சிற்றூரில் இரண்டு நெடுங்கற்கள் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இதை இங்குள்ள மக்கள் " நாட்டுக்கல் " என்ற பெயரில் வழிபடுகின்றனர் . இங்கு நான்கு நெடுங்கற்கள் இருந்து இருக்கவேண்டும். இரண்டு நடுகற்கள் மட்டும் நல்ல நிலையில் உள்ளன. மற்றிரண்டும் உடைந்து கீழ் பாகம் மட்டும் காணப்படுகின்றன. இது வழிபாட்டில் உள்ளதால், இந்த ஊர் மக்கள் பூஜை செய்து வழிபட்டு பாதுகாக்கின்றனர். |
ஒளிப்படம்எடுத்தவர் | - | காந்திராஜன் க.த. |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | பெருங்கற்கால ஈமச்சின்ன வகைகளுள் ஒன்றான நெடுங்கல் கொங்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. நட்டபோலும் நடா நெடுங்கல் இறந்துபட்ட செயற்கரிய செய்த தலைவனின் நினைவாக நாட்டப்படுவதாகும். சங்கஇலக்கியமும், தொல்காப்பியமும் இத்தகு நினைவு வீரக்கல்லை பற்றிய செய்திகளை நமக்கு எடுத்தியம்புகின்றன். அவ்வகையில் பஞ்சலிங்கபுரத்தில் காணப்படும் இந்த இரண்டு நெடுங்கற்கள் பீடும் பெயரும் எழுதப்பட்ட நடுகற்களுக்கு முந்தைய வடிவினதாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. |