அமைவிடம் | - | புதுக்குடி-ஏரிக்கரை |
ஊர் | - | புதுக்குடி |
வட்டம் | - | மேலூர் |
மாவட்டம் | - | மதுரை |
வகை | - | கருப்பு-சிவப்பு, பானையோடுகள் |
கிடைத்த தொல்பொருட்கள் | - | கருப்பு-சிவப்பு பானையோடுகள், இரும்புக் கசடுகள், தூம்பு |
பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
கண்டறியப்பட்ட காலம் | - | பொ.ஆ.2013 |
கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மதுரை கோ.சசிகலா |
விளக்கம் | - | மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள புதுக்குடி என்னும் சிற்றூரின் ஏரிக்கரையோரம் பெருங்கற்கால பண்பாட்டுச் எச்சங்கள் மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது. இத்தொல்லியல் களத்தில் கருப்பு, கருப்பு-சிவப்பு பானையோடுகள், இரும்புக்கசடுகள் முதலிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இங்குள்ள ஏரியில் தூம்பு ஒன்று கண்டறியப்பட்டது. |
ஒளிப்படம்எடுத்தவர் | - | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
சுருக்கம் | - | புதுக்குடி தொல்லியல் களம் பெருங்கற்கால பண்பாட்டு எச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. 2013-இல் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பு களஆய்வில் பரந்த நிலப்பரப்பிலும், அதனை ஒட்டி அமைந்துள்ள ஏரிக்கரையிலும் கருப்பு நிறப் பானையோடுகள், கருப்பு-சிவப்பு நிற பானையோடுகள் உள்ளிட்ட பெருங்கற்கால தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. |