தேவனாம்பாளையம்

அமைவிடம் - தேவனாம்பாளையம்
ஊர் - தேவனாம்பாளையம்
வட்டம் - கிணத்துக்கடவு
மாவட்டம் - கோயம்புத்தூர்
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

தேவனாம்பாளையம் ஊராட்சி  கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு வட்டாரத்தில் அமைந்துள்ளது. தேவனாம்பாளையம் ஊராட்சியில் காணப்படுகின்ற மூன்று இடுகாடுகளில் ஒன்று பெருங்கற்காலத்தைச் சேர்ந்த்து. இவ்வூரின் ஈமப்பகுதியில் மூன்று குத்துகற்கள் காணப்படுகின்றன. குத்துக்கற்கள் இறந்தோரின் நினைவாக நடப்படும் வீரக்கல்லாகும். நடுகல்லின் வகையைச் சேர்ந்த இந்த குத்துக்கற்கள் எழுத்துப்பொறிப்புகளோ, உருவங்களோ அற்று காணப்படும்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

தேவணாம்பாளையம் ஊரில் பரந்த வெளியில் ஆங்காங்கு காணப்படுகின்ற குத்துக்கற்கள் காலத்தால் முற்பட்டவை. பெருங்கற்காலத்தின் ஈமச்சின்னங்களுள் ஒன்றான இந்த குத்துக்கற்கள் இறந்த வீரனின் நினைவாக நடப்பட்ட வீரக்கற்களாகும். மூன்று குத்துக்கற்கள் இப்பகுதியில் காணப்படுகின்றன.