பெரும்பாக்கம்

அமைவிடம் - பெரும்பாக்கம்
ஊர் - பெரும்பாக்கம்
வட்டம் - செங்கல்பட்டு
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாக்கம் என்னும் ஊரின் ஈமக்காட்டுப் பகுதியில் பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களான கற்குவியல்களும், குத்துக்கல்லும் காணப்படுகின்றன. கற்குவியல் எனப்படுவது இறந்தவரை தாழியில் வைத்து புதைத்த பின்பு அவ்விடத்தை கற்களைக் கொண்டு குவியலாக அமைப்பதாகும். இவ்வகை ஈமச்சின்னம் “பரல் உயர் பதுக்கை“ என சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் என்னும் ஊரில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. கற்குவியல், குத்துக்கல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை. இங்கு காணப்படுகின்ற குத்துக்கல் ஒன்று வழிபாட்டில் உள்ளது.