ஆமூர்

அமைவிடம் - ஆமூர்
ஊர் - ஆமூர்
வட்டம் - செங்கல்பட்டு
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

செங்கற்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள ஆமூர் கல்வட்டங்கள் கருங்கற்களால் ஆனவை. இவ்வூரின் ஈமக்காட்டுப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் விரவி கிடைக்கின்றன. இந்த கல்வட்டங்களின் நடுவில் தாழிகள் வைக்கப்பட்டு பண்டையோர் உடல்கள் புதைக்கப்பட்டன. ஆமூர் ஈமக்காட்டில் காணப்படுகின்ற இந்த பெருங்கற்காலப் பண்பாட்டு கல்வட்டங்கள் ஒன்றுக்கொன்று அளவில் வேறுபடுகின்றன. சிறிய அளவிலும், பெரியதாகவும் வட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆமூர் என்னும் ஊர் மிகவும் பழமை வாய்ந்த ஊராகும். இவ்வூரில் பெருங்கற்காலப் பண்பாட்டு சின்னங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன. குறிப்பாக கல்வட்டங்கள் வட்ட வடிவில் உள்ளன. இந்த கல்வட்டங்கள் யாவும் கருங்கற்களால் ஆனவை.