திருப்போரூர்

அமைவிடம் - திருப்போரூர்
ஊர் - திருப்போரூர்
வட்டம் - செங்கல்பட்டு
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்போரூரில் காணப்படுகின்ற பெருங்கற்கால பண்பாட்டு ஈமச்சின்னங்கள் குறிப்பிடத்தக்கவை. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த கல்வட்டங்கள் அளவில் பெரியனவாகவும், பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்டனவாகவும் தெரிகின்றன. பெருங்கற்காலப் பண்பாட்டினைத் தொடர்ந்து இப்பகுதியில் ஒரு தொடர்ச்சியான ஈமச்சின்னங்கள் அமைப்பது நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஒரு சில கல்வட்டங்களின் நடுவில் அமைக்கப்பட்ட கல்லில் சமயச் சின்னங்கள் வரையப்பட்டுள்ளதைக் காணும் பொழுது அவை இன்றும் வழிபாட்டில் இருப்பதாக கூறலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ள திருப்போரூரில் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தின் கல்வட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு அமைந்துள்ள முருகன் கோயிலின் அருகில் இந்த ஈமச்சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. இந்த கல்வட்டங்களும் வழிபாட்டில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.