பொன்மார்

அமைவிடம் - பொன்மார்
ஊர் - பொன்மார்
வட்டம் - செங்கல்பட்டு
மாவட்டம் - செங்கல்பட்டு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

பொன்மார் என்னும் ஊரின் ஈமச்சின்னப்பகுதிகள் மத்தியத்தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவ்வூரில் பண்டு நிலவியிருந்த பெருங்கற்காலப் பண்பாட்டினை காட்டுவதாக இங்கு கருப்பு-சிவப்பு பானையோடுகள் கிடைக்கின்றன. மேலும் ஈமச்சின்னங்களுள் ஒன்றான சிதிலமடைந்த கல்வட்டங்கள் சிலவும் இங்கு ஆங்காங்கு காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

செங்கல்பட்டு வட்டாரத்தில் அமைந்துள்ள பொன்மார் என்னும் ஊர் பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தின் எச்சத்தைக் கொண்டு விளங்குகிறது. இவ்வூரில் பண்டு அமைக்கப்பட்டிருந்த கல்வட்டங்கள் பலவும் தற்போது சிதைக்கப்பட்ட நிலையில் ஆங்காங்கு காணப்படுகின்றது. இப்பகுதி பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.