அஞ்சூர்

அமைவிடம் - அஞ்சூர்
ஊர் - அஞ்சூர்
வட்டம் - அரவக்குறிச்சி
மாவட்டம் - கரூர்
வகை - குத்துக்கல்/நடுகல்
கிடைத்த தொல்பொருட்கள் - குத்துக்கல்/நடுகல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

அஞ்சூரில் காணப்படும் குத்துக்கல் சுமார் 3 அடி உயரம் கொண்டதாக உள்ளது. எழுத்துக்களோ, புடைப்புச் சிற்பங்களாக வீரனின் உருவமோ அற்ற நிலையில் வெறும் பலகைக்கல்லாக நாட்டப்பட்டுள்ள இந்த வகை குத்துக்கற்களும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ள அஞ்சூர் என்னும் ஊரில் ஒரு தனியார் தென்னந்தோப்பின் நடுவில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களுள் ஒன்றான குத்துக்கல் காணப்படுகின்றது. சுமா 3 அடி உயரமுள்ள இந்த குத்துக்கல் அகன்றதாக காணப்படுகின்றது. செயற்கரிய செயல் செய்து உயிர் துறந்த வீர்ருக்கு நாட்டப்படும் இவ்வகை வீரக்கல் அக்குலத்தவரால் வழிபடப்படுகின்றது.