பனப்பட்டி

அமைவிடம் - பனப்பட்டி
ஊர் - பனப்பட்டி
வட்டம் - பொள்ளாச்சி
மாவட்டம் - ஈரோடு
வகை - கல்வட்டம்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஈரோடு மாவட்டம் பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பனப்பட்டி என்னும் ஊரில் ஈமக்காட்டுப்பகுதியில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்வட்டங்கள், முதுமக்கள் தாழி ஆகிய மேற்பரப்பாய்வில் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கல்வட்டங்கள் சில சிதைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த உடைந்த தாழியின் வாய்ப்பகுதி களஆய்வில் அறியப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஈரோடு வட்டாரத்தில் அமைந்துள்ள பனப்பட்டி என்னும் சிற்றூர் பெருங்கற்காலப் பண்பாட்டை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இவ்வூரில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பாய்வில் இங்கு கல்வட்டங்கள் ஈமக்காட்டில் கண்டறியப்பட்டுள்ளன. உடைந்த முதுமக்கள் தாழிகள் ஆங்காங்கே கிடைக்கின்றன. கல்வட்டங்கள் பெரும்பரப்பளவில் காணப்படுகின்றன. பல கல்வட்டங்கள் சிதைவுற்றுள்ளன.