சின்னமாட்டராம்பள்ளி

அமைவிடம் - சின்னமாட்டராம்பள்ளி
ஊர் - சின்னமாட்டராம்பள்ளி
வட்டம் - பர்கூர்
மாவட்டம் - கிருஷ்ணகிரி
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கு கற்காலக் கருவிகளின் குவியல் ஒன்று காணப்படுவது மேற்பரப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கற்காலக் கருவிகள் வெவ்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் காணப்படுகின்றன. மேலும் இவ்வூரில் இரண்டு குத்துக்கற்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு நடுகற்களில் ஒன்று தென்னந்தோப்பு ஒன்றின் நடுவே அமைந்து வழிபாட்டில் உள்ளது. ஆனால் இவ்விரு நடுகற்களிலும் எழுத்துப்பொறிப்புகளோ, உருவங்களோ இடம் பெறவில்லை.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கிருஷ்ணகிரி மாவட்டத்தினைப் பொறுத்தவரை அதிக அளவிலான தொல்லியல் சான்றுகள் தொல்பழங்காலம் முதல் வரலாற்றுக்காலம் வரை காணப்படுவது கண்கூடு. இவற்றில் சின்னமாட்டாரம் பள்ளி என்னும் ஊரில் இரண்டு குத்துக்கற்களும், கற்காலக் கருவிகளின் குவியல் ஒன்றும் காணப்படுகின்றது.