முக்குடிவேலம்பாளையம்

அமைவிடம் - முக்குடிவேலம்பாளையம்
ஊர் - முக்குடிவேலம்பாளையம்
வட்டம் - ஈரோடு
மாவட்டம் - ஈரோடு
வகை - நெடுங்கல்
கிடைத்த தொல்பொருட்கள் - நெடுங்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

முக்குடிவேலாம்பாளையத்தில் இரண்டு நெடுங்கற்கள் காணப்படுகின்றன. இந்த நெடுங்கற்கள் தற்போதுவரை வழிபாட்டில் உள்ளன. இங்கு காணப்படுகின்ற இரு நெடுங்கற்களில் ஒன்று 20 அடி உயரத்தில் உள்ளது. மற்றொன்று அதனைவிட சற்று குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டப்பட்டுள்ள இவ்விரு நெடுங்கற்களும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த வீரவழிபாட்டிற்குரியதாகும். அவ்வீரவணக்கம் இன்று வரை இங்கு தொடர்கிறது. வேடன் கல் என்று இந்த நெடுங்கற்கள் அழைக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

முக்குடிவேலம்பாளையம் வேளாண்மை தொழில் சார்ந்த ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் பாசூர் பேரூராட்சியில் உள்ளது. முக்குடிவேலம்பாளையம் என்ற ஊர் ஈரோடு - கரூர் சாலையில் உள்ள சோளங்காபாளையம் அருகில் உள்ளது. இரண்டு நெடுங்கற்கள் அருகருகே அமைந்துள்ளன. இது மிகவும் அகலமான மற்றும் உயரமான நெடுங்கல் , இதன் உயரம் சுமார் 20 அடி இருக்கும் . முக்குடிவேலம்பாளையம் அருகில் உள்ள பஞ்சலிகபுரத்தில் உள்ள நெடுகற்களை அங்கு உள்ள மக்கள் "நாட்டுக்கல்" என்று வழிபடுகின்றனர்.