குடுமியான்பாளையம்-ஆர்.ஆர்.தோட்டம்

அமைவிடம் - குடுமியான்பாளையம்-ஆர்.ஆர்.தோட்டம்
ஊர் - குடுமியான்பாளையம்-ஆர்.ஆர்.தோட்டம்
வட்டம் - அறச்சலூர்
மாவட்டம் - ஈரோடு
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

கொங்குப்பகுதிகளுள் ஒன்றான ஈரோடு மாவட்டம் குடுமியான்பாளையம் ஆர்.ஆர்.தோட்டம் என்னுமிடத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் சுமார் 11 அடி உயரமுள்ள நெடுங்கல் ஒன்று கண்டறியப்பட்டது. இந்த நெடுங்கல்லில் சில வெடிப்புகளும் காணப்படுகின்றன. முனை மேல் நோக்கி கூராக செல்வதாக நாட்டப்பட்டுள்ளது. இதன் அகலம் அடியாக கணக்கிடப்படுகிறது. நெடுங்கல்லின் உயரத்தில் நான்கில் ஒரு பாகத்து அகலத்தைப் பெற்றுள்ளது இந்த நெடுங்கல்.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

கொங்கு நாட்டில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான ஈரோடு குடுமியான்பாளையம் ஆர்.ஆர்.தோட்டத்தில் அமைந்துள்ள ஒரு நெடுங்கல்லும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையான கற்களால் ஆன பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் கொங்குப்பகுதியில் அதிகம் காணப்படுவதற்கு அங்கு காணப்படுகின்ற மலைகளே காரணமாகும். இந்த நெடுங்கல் நாட்டப்படுவதற்கு முன் நன்கு கூராக மேற்பகுதி வடிக்கப்பட்டமை தெரிகின்றது.