மலையம்பாளையம்

அமைவிடம் - மலையம்பாளையம்
ஊர் - மலையம்பாளையம்
வட்டம் - க.பரமத்தி
மாவட்டம் - திருப்பூர்
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

மலையம்பாளையம் என்னும் கிராமம் தொல்லியல் சின்னங்களின் எச்சங்களை தன்னகத்தேப் பெற்ற ஊராக விளங்குகிறது. இங்கு கல்வட்டங்களும், கற்திட்டைகளும் பண்டு நிறைந்திருந்தன. தற்போது ஒரு கற்திட்டையும், ஒரு கல்வட்டமும் மட்டுமே காணப்படுகின்றது. விவசாய நிலத்திற்காக இவை அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. கற்திட்டை இவ்வூரில் அமைந்துள்ள வேலாயுதசுவாமி கோயிலின் மேற்குப்புறத்தில் காணப்படுகின்றது. சுமார் 21 அடி விட்டமுள்ள கல்வட்டத்தின் கற்கள் பெரியனவாகவும் கிரானைட் கற்களாகவும் காட்சியளிக்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஈரோடு மாவட்டம் க.பரமத்தி வட்டாரத்தில் அமைந்துள்ள மலையம்பாளையம் என்னும் சிற்றூர் பெருங்கற்காலப் பண்பாட்டை தன்னகத்தேக் கொண்டுள்ளது. இவ்வூரில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பாய்வில் இங்கு கல்வட்டம் ஒன்றும், கற்திட்டை ஒன்றும் ஈமக்காட்டில் கண்டறியப்பட்டுள்ளன.