தாளவாடி

அமைவிடம் - தாளவாடி
ஊர் - தாளவாடி
வட்டம் - தாளவாடி
மாவட்டம் - ஈரோடு
வகை - குத்துக்கல்/கல்வட்டங்கள்
கிடைத்த தொல்பொருட்கள் - கல்வட்டங்கள், குத்துக்கல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

ஈரோடு தாளவாடி வட்டாரத்தில் அமைந்துள்ள தாளவாடி என்னும் ஊரில் குத்துக்கற்கள் காணப்படுகின்றன. ஆனால் இந்த நெடுங்கற்கள் கொங்குப்பகுதிகளான கொடுமணல் மற்றும் குமரிக்கல்பாளையம் ஆகிய ஊர்களில் காணப்படும் நெடுங்கற்களைப் போன்று உயரமானது அன்று.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
சுருக்கம் -

ஈரோட்டில் உள்ள தாளவாடி குத்துக்கற்கள் சுமார் 3 அடி உயரமுடையவை. மேலும் இங்கு சிதைக்கப்பட்ட நிலையில் கல்வட்டங்களும் காணக்கிடக்கின்றன.