கம்பையநல்லூர்

    அமைவிடம் - கம்பையநல்லூர்
    ஊர் - கம்பையநல்லூர்
    வட்டம் - ஓசூர்
    மாவட்டம் - தருமபுரி
    வகை - புதிர்நிலை
    கிடைத்த தொல்பொருட்கள் - புதிர்நிலை கல்வட்டங்கள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    கண்டறியப்பட்ட காலம் - 2014
    கண்டறிந்த நிறுவனம்/நபர் -

    சுகவனம் முருகன், சதானந்தம் கிருஷ்ணகுமார்

    விளக்கம் -

    தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள கம்பயநல்லூரில் சிக்கலான வழிகள் உள்ள மாபெரும் புதிர்நெறிக்கூடம் (labyrinth) ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  குழப்பும் பாதைகள் உள்ள புதிர்நெறிக்கூடங்கள் பல கலாச்சாரங்களில் செழுமைக் குறியீடாக அறியப்பட்டுள்ளன.  புதிய கற்காலத்திலிருந்து உள்ளுணர்வின் ஒரு தனிமைவைந்த அமைப்பாகவும், எண்ண அலைகளை ஒருமைப்படுத்தும் கருவிகளாகவும் அவை பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிர்நிலைகள் என்பது மையத்தில் விடையை கொண்டு உள் மற்றும் வெளிச்செல்ல இயலாத பல்வேறு சூழ்நிலைப் பாதைகளுடன் விளங்குபவையாகும். இத்தகைய புதிர்நிலைகள் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றன என்பதைப் புதிய கற்காலத்தில் இருந்தே தொல்லியல் ஆய்வாளர்கள் பதிவு செய்து வருகிறார்கள். இதில் வட்டப்புதிர் வழிகள் ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும்.  தென்னிந்தியாவில் முதன் முதலில் கிருஷ்ணகிரி பகுதியில் வட்டப்புதிர் நிலை கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 30 ஆண்டுகள் கழித்து தற்போது தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் சதுரப் புதிர்நிலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது உலகில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்நிலைகளிலேயே பெரியதாகும். ஏறத்தாழ 80-க்கு 80 அடி பரப்பில் உள்ளது. இன்றும் மக்கள் வழிபாட்டில் உள்ளது. இது பழமையான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

    ஒளிப்படம்எடுத்தவர் - சுகவனமுருகன்
    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்
    குறிப்புதவிகள் -
    1. Dr.S.V.Subramanian, Dr.K.D.Thirunavukkarasu, ‘Historical Heritage of the Tamils’, International Institute of Tamil Studies, Tharamani, Chennai, 1983.
    2. Joanna Sudyka, ‘The Megalithic Iron Age Culture in South India – Some General Remarks’, Analecta Archaeologica Ressoviensia, Vol.5, 2011
    3. Dr.V.Selvakumar, ‘Hunter-Gatherer Adaptations in Madurai Region, Tamil Nadu, India: From c. 10,000 B.P. to c. A.D.500’
    4. B.Sasisekaran and B.Raghunatha Rao, ‘Iron in Ancient Tamilnadu’ Jamshedpur, India, 2001.
    5. B.Narasimhaiah, ‘The Neolithic and megalithic cultures in Tamil Nadu_with special reference to its western part', Deccan College, Pune, 1976.
       
    6. History and General Studies, ‘Megalithic Cultures’