பனக்குடி

அமைவிடம் - பனக்குடி
ஊர் - பனக்குடி
வட்டம் - நீலகிரி
மாவட்டம் - நீலகிரி
வகை - கற்திட்டைகள்
கிடைத்த தொல்பொருட்கள் - கற்திட்டைகள், கற்பரல்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

நீலகிரி மாவட்டம் பனக்குடிப்பகுதியில் காணப்படும் கற்திட்டைகள் அடிப்பக்கத்தில் கற்கள் வரிசையாக உயரத்திற்காக அடுக்கப்பட்டு அதற்கு மேல் பலகைக் கற்கள் நான்குபுறமும் வைக்கப்பட்டு மேலே மூடுகல் பெற்றுள்ளன. இவ்விடத்திலும் பல கற்திட்டைகள் சிதைக்கப்பட்டும், காலந்தொறும் மாற்றப்பட்டும் வந்துள்ளன என்பதுவும் இதில் தெரிகின்றது.

ஒளிப்படம்எடுத்தவர் - திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக்கழகம்