| அமைவிடம் | - | பனக்குடி |
| ஊர் | - | பனக்குடி |
| வட்டம் | - | நீலகிரி |
| மாவட்டம் | - | நீலகிரி |
| வகை | - | கற்திட்டைகள் |
| கிடைத்த தொல்பொருட்கள் | - | கற்திட்டைகள், கற்பரல் |
| பண்பாட்டுக் காலம் | - | பெருங்கற்காலம் |
| கண்டறிந்த நிறுவனம்/நபர் | - | மத்தியத் தொல்லியல் துறை |
| விளக்கம் | - | நீலகிரி மாவட்டம் பனக்குடிப்பகுதியில் காணப்படும் கற்திட்டைகள் அடிப்பக்கத்தில் கற்கள் வரிசையாக உயரத்திற்காக அடுக்கப்பட்டு அதற்கு மேல் பலகைக் கற்கள் நான்குபுறமும் வைக்கப்பட்டு மேலே மூடுகல் பெற்றுள்ளன. இவ்விடத்திலும் பல கற்திட்டைகள் சிதைக்கப்பட்டும், காலந்தொறும் மாற்றப்பட்டும் வந்துள்ளன என்பதுவும் இதில் தெரிகின்றது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | - | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | - | தமிழ் இணையக் கல்விக்கழகம் |