உலைப்பட்டி

அமைவிடம் - உலைப்பட்டி
ஊர் - உலைப்பட்டி
வட்டம் - உசிலம்பட்டி
மாவட்டம் - மதுரை
வகை - பெருங்கற்காலம்
கிடைத்த தொல்பொருட்கள் - கார்லீனியன் மணிகள் 92, பட்டன் வடிவ கார்லீனியன் 760, அகேட் 66, கண்ணாடி மணிகள் 352, செப்பு ஆணிகள் 50, வளையல்கள் 3, தாங்கி 1,(பிற்காலம்), கருப்பு சிவப்பு நிறத் தாங்கி 1 ( 25 செ,மீ. சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறத் தாங்கி 1 ( 16 செ,மீ. சுற்றளவு), கருப்பு சிவப்பு நிறத் தாங்கி 1 ( 16 செ,மீ. சுற்றளவு) கருப்பு நிறத் தாங்கி 1 ( 26 செ,மீ. சுற்றளவு) கருப்பு நிறத் தாங்கி 1 ( 32 செ,மீ. சுற்றளவு) கருப்பு நிறத் தாங்கி 1 ( 28 செ,மீ. சுற்றளவு) கருப்பு நிறக் கிண்ணம் 1 (24 செ.மீ சுற்றளவு) கருப்பு நிறக் கிண்ணம் 1 (54 செ.மீ சுற்றளவு) கருப்பு நிறக் கிண்ணம் 1 (47 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (54 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (38 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (38 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (25 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (39 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (65 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (43 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (21 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (40 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (36 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (22 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (22 செ.மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக் கிண்ணம் 1 (47 செ.மீ சுற்றளவு) சிவப்பு நிறக் குடுவை 1 ( பழமையானது கி.மு 1500, 86 செமீ. சற்றளவும், கழுத்து 6 செ,மீ, அகலம் 11 செமீ.) சிவப்பு நிறக் குடுவை 1 (66 செமீ.) சிவப்பு நிறக் குடுவை 1 (72 செமீ.) சிவப்பு நிறக் குடுவை 1 (32 செமீ. சற்றளவும்,) சிவப்பு நிறக் குடுவை 1 (55 செமீ. சற்றளவும்,) கருப்பு நிறக் குடுவை – 1 ( 15 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 42 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 46 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 47 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 42 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 45 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறக் குடுவை – 1 ( 32 செ,மீ சுற்றளவு) பானை (உடைந்த நிலையில்) 1 சுற்றளவு 49 செமீ. கருப்பு நிறக் குடுவை 4 கால்களுடன் – 1 ( 38 செ,மீ சுற்றளவு) கருப்பு நிறச் சட்டி– 1 ( 62 செ,மீ சுற்றளவு) கருப்பு நிற மூடி 1 ( 28 செ,மீ. சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 33 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 35 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 34 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 58 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 (40 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 37 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 25 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 36 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 44 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 37 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 56 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 (33 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 45 செ,மீ சுற்றளவு) கருப்பு சிவப்பு நிறக்குடுவை – 1 ( 42 செ,மீ சுற்றளவு) இரும்பு உருக்கு கழிவு 1, மனித பற்கள் 10, இரும்பு வாள்கள் ( உடைந்த நிலையில்) செப்புத்துண்டுகள் ( உடைந்த நிலையில்) மனித எலும்புத் துண்டுகள்
பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
கண்டறியப்பட்ட காலம் - பொ.ஆ.2020
கண்டறிந்த நிறுவனம்/நபர் -

மத்தியத் தொல்லியல் துறை

விளக்கம் -

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் எழுமலை மற்றும் சதுரகிரி அருகே உள்ள சூலப்புரம்-உலைப்பட்டி கிராமத்தில் சமீபத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளூர் ஆர்வலர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு அரிய வகை பல்வேறு மணிகள் அதிக எண்ணிக்கையில் கிடைத்துள்ளது. இவற்றில் கார்லீனியன் மணிகள், பட்டன் வடிவ கார்லீனியன், அகேட், கண்ணாடி மணிகள், செப்பு ஆணிகள், வளையல்கள், கருப்பு சிவப்பு நிறத் தாங்கிகள், கருப்பு நிறத் தாங்கிகள், கருப்பு நிறக் கிண்ணங்கள், கருப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள், சிவப்பு நிறக் குடுவைகள், கருப்பு நிறக் குடுவைகள், கருப்பு சிவப்பு நிறக்குடுவைகள், கருப்பு நிறக் குடுவை (4 கால்களுடன்), கருப்பு நிறச் சட்டி மற்றும் மூடிகள், 1, மனித பற்கள், இரும்பு வாள்கள் ( உடைந்த நிலையில்), செப்புத்துண்டுகள் ( உடைந்த நிலையில்), மனித எலும்புத் துண்டுகள் மற்றும் இரும்பு உருக்கு கழிவுகள் அதிக அளவில் இங்கு கிடைத்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தாழிகள் கல்வட்டங்களோடு காணப்படுகின்றது. கல்வட்டங்கள் யாவும் சிதைந்த நிலையிலேயே உள்ளது. இங்கு கிடைத்துள்ள பொருட்கள் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்ததாக உள்ளது. இருப்பினும் இங்குள்ள தொன்மையான பொருட்கள் 2500 – 3000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் இருக்கலாம் என கருதலாம். முறையான அகழாய்வுக்குப் பின்னரே காலத்தை உறுதி செய்ய இயலும்.

ஒளிப்படம்எடுத்தவர் - காந்திராஜன் க.த.
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
சுருக்கம் -

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள கிராமம்தான் உலைப்பட்டி. இங்கு கி.மு 5 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முதுமக்கள் தாழிகள், கல் வட்டங்கள், குத்துக்கல், கற்பலகைகள் என பண்டைய தமிழர்களின் இறப்புச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் கார்னீலியம், அகெட் போன்ற மணி வகைகளும் கிடைத்துள்ளன. அகழாய்வு செய்யப்பட வேண்டிய தொல்லியல் களமாக அமைந்துள்ளது.